நீலகிரி உதகை - சோலூர் சாலையை கம்பீரமாக கடந்த புலி - திக்..திக்.. வீடியோ வைரல்

உதகை - சோலூர் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளை அச்சத்தில் உறைய வைத்து, புலி ஒன்று சாலையை கடந்து சென்று படம் பிடிப்பவர்களுக்கு போஸ் கொடுக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பு.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மலை கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. இதனால் வன விலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது வழக்கமாக இருந்து வருகிறது.



இந்த நிலையில் உதகை - சோலூர் சாலையில் புலி ஒன்று கம்பீரமாக சாலை உலா வந்த புலியை கண்டு வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். அப்போது, அந்த புலி எந்த சலனமும் இன்றி சாலையை கடந்து சென்று தேயிலை தோட்டத்திற்குள் புகுந்தது.



மேலும் வாகனத்தில் இருந்து செல்போனில் படம் பிடித்தவர்களுக்கு புலி போஸ் கொடுத்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...