வேங்கைவயல் விவகாரம் - திருப்பூரில் விசிக கண்டன ஆர்ப்பாட்டம்

வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர்த் தொட்டியில் மலத்தைக் கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.


திருப்பூர்: திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் அடுத்த இறையூரில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் சமூக விரோதிகள் மலத்தைக் கலந்ததாகக் கூறப்படுகிறது.



இதனைக் கண்டிக்கும் வகையிலும் இந்து வழிபாட்டுத் தலங்களுக்குள் தங்களையும் அனுமதிக்க வேண்டும், தேநீர்க் கடைகளில் இரட்டை குவளை முறைகளை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பு வடக்கு மாவட்டச் செயலாளர் தமிழ் வேந்தன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில், குடிநீரில் மனித மலத்தைக் கலந்த சாதிவெறி கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வழிபாட்டுத் தளங்களுக்குள் செல்லக்கூடிய அருந்ததியின மக்களுக்குத் தமிழக அரசு உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.



இதில் மண்டல அமைப்புச் செயலாளர் சுசி.கலையரசன், கிழக்கு மாவட்டச் செயலாளர் தமிழ்முத்து, தெற்கு மாவட்டச் செயலாளர் சதீஸ், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில துணை செயலாளர் துரை வளவன்,நாடாளுமன்றத் தொகுதி துணை செயலாளர் முருகானந்தம், காங்கேயம் சட்டமன்றத் தொகுதி செயலாளர் ஜான் நாக்ஸ், பல்லடம் சட்டமன்றத் தொகுதி செயலாளர் ரங்கசாமி, வடக்கு சட்டமன்றத் தொகுதி செயலாளர் மூர்த்தி, மடத்துக்குளம் தொகுதி செயலாளர் ஈஸ்வரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலச் செயலாளர் கனகராஜ் மற்றும் திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...