வால்பாறையில் இருசக்கர வாகனம் பாறையில் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்றிரவு இளைஞர்கள் சென்ற இருசக்கர வாகனம் பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், படுகாயமடைந்த மகேஷ் என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.


கோவை: வால்பறை பச்சமலை எஸ்டேட்டை சேர்ந்தவர் மகேஷ் (வயது 23). இவர், சின்கோனா ஸ்டேட்டை சேர்ந்த மணிகண்டன் (வயது 23), சின்கோனா எஸ்டேட்டை சேர்ந்த நந்தகுமார் (வயது 22) மற்றும் ரொட்டிகடையை சேர்ந்த அஸ்வின் (வயது 18) ஆகியோருடன் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில், வால்பாறையிலிருந்து சின்கோனா எஸ்டேட் பகுதிக்கு சென்றுள்ளனர்.

சிறுகுன்றா எஸ்டேட் பகுதிக்கு செல்லும்போது, இருசக்கர வாகனத்தின் லைட் பழுதானதாகக் கூறப்படுகிறது. இதனால், சாலை தெரியாமல் நிலை தடுமாறிய இருசக்கர வாகனம் அங்கிருந்த பாறைமேல் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில், மகேஷ்க்கு பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற மூன்று பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

காயமடைந்த மகேஷை, அவ்வழியாக வந்த வாகனத்தில் ஏற்றி, வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மகேஷ் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.



தகவலறிந்து வந்த காவல்துறையினர், இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற மணிகண்டன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...