கோவை சூலூர் அருகே சாலைத்தடுப்பில் அரசுப்பேருந்து மோதி விபத்து - உயிர் தப்பிய பயணிகள்!

கோவை மாவட்டம் சூலூர் அருகே அதிவேகமாக சென்ற அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில், பயணிகள் அனைவரும் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் பழைய வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பாக திருச்சி சாலையில் குறுக்கு சாலை சந்திப்பு உள்ளது. இங்கு விபத்து ஏற்படாமல் இருப்பதற்கு காவல்துறை சார்பில் டிவைடர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், திருச்சியில் இருந்து கோவை நோக்கி வந்துகொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று, டிவைடர் வைக்கப்பட்டுள்ள இடத்தை கடந்தபோது, முன்னால் சென்றுகொண்டிருந்த பைக் மீது மோதாமல் தவிர்ப்பதற்காக, பேருந்து ஓட்டுநர் முயற்சித்தார்.



அப்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அரசுப்பேருந்து அருகே இருந்த சாலை தடுப்பு (சென்டர் மீடியன்) மீது மோதி விபத்துக்குள்ளானது.



இதில், பேருந்தின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்த நிலையில், பயணிகள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

காயமடைந்த பயணிகள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், விபத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.



இந்த விபத்தால் திருச்சி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...