'உள்ளாட்சித் தேர்தலில் திமுக தில்லுமுல்லு செய்துதான் வெற்றி பெற்றது..!' - எம்எல்ஏ எஸ்பி வேலுமணி குற்றச்சாட்டு

வாக்கு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்துதான் திமுக வெற்றி பெற்றது. இதை நான் சட்டசபையில் ஸ்டாலின் முன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினேன். வரும் தேர்தல்களில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று எடப்பாடியார் தலைமையில் அதிமுக ஆட்சி அமையும் என்று கோவையில் அதிமுக எம்எல்ஏ வேலுமணி பேச்சு.


கோவை: கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற எம்.ஜி.ஆரின் 106ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார்.



கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே அதிமுக சார்பாக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு நகரக் கழக செயலாளர் ஆனந்தன் தலைமை வகித்தார். நகர அம்மா பேரவை செயலாளர் சிவக்குமார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.



கோவை புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளரும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான பிஆர்ஜி அருண்குமார் முன்னிலை வகித்துப் பேசினார்.



சிறப்பு விருந்தினராக அதிமுக தலைமை கழக செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி வேலுமணி கலந்து கொண்டு பேசினார்.



அப்போது பேசிய அவர், அம்மா ஆட்சியில் தாலிக்குத் தங்கம், மடிக்கணினி, அம்மா உணவகம், மற்றும் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட மிக்ஸி, கிரைண்டர் இன்றும் வீடுகளில் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இவை அனைத்தும் தந்தவர் அம்மா தான்.



இதேபோல் கோவை மாவட்டம் முழுவதும் சாலைகளும், பாலங்களும் அமைத்தது அதிமுக ஆட்சியில் தான். நாம் துவங்கிய பாலங்களைத் தான், இவர்கள் துவக்கி வைக்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு தில்லுமுல்லுகளை செய்துதான் திமுக வெற்றிபெற்றது.வாக்கு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்துதான் திமுக வெற்றி பெற்றது. இதை நான் சட்டசபையில் ஸ்டாலின் முன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினேன்.



வரும் தேர்தல்களில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று எடப்பாடியார் தலைமையில் அதிமுக ஆட்சி அமையும் என்றார். இந்த நிகழ்ச்சியில், திரைப்பட இயக்குநர் மனோஜ் குமார் மற்றும் தலைமை கழக பேச்சாளர் கலை முரசு காசிநாதன் ஆகியோர் பேசினர்.



முன்னாள் அமைச்சர் புத்தி சந்திரன், ஏ கே செல்வராஜ் எம்.எல்.ஏ, முன்னாள் எம்எல்ஏ ஓ.கே சின்ராஜ், ஊராட்சித் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...