தாராபுரத்தில் கழிவுநீர் கால்வாய் அடைப்பை சீர்செய்த பணியாளர்கள்

தாராபுரம் நகராட்சிக்குப் பகுதியில் ஏற்பட்ட கழிவுநீர் கால்வாயை நகர்மன்ற உறுப்பினர் மேற்பார்வையில் சரிசெய்யப்பட்டது.


திருப்பூர்: தாராபுரம் நகராட்சியில் தொற்று ஏற்படும் நிலையிலிருந்த கழிவுநீர் கால்வாய் அடைப்பை ஊழியர்கள் சரிசெய்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது வார்டு பகுதியில் உள்ள காட்டூரில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்த் தொற்று அபாயம் ஏற்பட்டது.

இதனை அறிந்த மூன்றாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் அன்பழகன் உடனடியாக தாராபுரம் நகராட்சி தூய்மை பணியாளர்களை வைத்து சாக்கடை கால்வாய் அடைப்பைச் சரி செய்தார்.

நகர்மன்ற உறுப்பினரின் செயலை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பாராட்டினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...