கோவையில் கஞ்சா கும்பல் தலைவன் கைது - கூட்டாளிகள் 10 பேருக்கு போலீஸ் வலைவீச்சு..!

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து சிறு வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்த காரமடையை சேர்ந்த சந்திரபாபுவை கைது செய்த போலீசார், அவரது கூட்டாளிகள் 10 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் சங்கனூர் சந்திப்பு அடுத்த ரூட்ஸ் மேம்பாலம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில், ரத்தினபுரி காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணா தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு நபரை பிடித்து விசாரித்துள்ளனர். மேலும் அவரது இருசக்கர வாகனம் மற்றும் உடைமைகளை சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையில், அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரை காவல் நிலையம் அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிடிபட்ட நபர் காரமடை பகுதியை சேர்ந்த சந்திரபாபு என்பது, வெள்ளலூர் பகுதியில் அறை எடுத்து தங்கி வந்துள்ளார் என்பது தெரியவந்தது.

ஆந்திராவிலிருந்து சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி வந்து கோயம்புத்தூரில் உள்ள சிறு வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் கட்டிட கூலி தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்று வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

சந்திரபாபுவிடம் தனிப்படை போலீசார் நடத்திய சோதனையில், 8 கிலோ 200 கிராம் கஞ்சா, கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம், ரூ.42,400 பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், சந்திரபாபுவிடம் கஞ்சாவை கொள்முதல் செய்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வரும் அவரது கூட்டாளிகள், ஜலீல், கிஷோர், பாண்டி, ரியாஸ் கான், முருகன், சிவா, முருகேசன், பாண்டி, மாணிக்கம் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த ஒரு நபர் என மொத்தம் 10 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்திரபாபு மீது துடியலூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர மற்றும் மாவட்ட போலீசார் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...