கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு காரணமாக ஆறுச்சாமி என்பவர் அரிவாளால் வெட்டியதில் வலது கை துண்டாகியது. செப்டம்பர் 23 அன்று பேரூராட்சி அலுவலகம் அருகே நடந்த இச்சம்பவத்தில், முருகன் வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, பின்னர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனைமலை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, தப்பியோட முயன்ற ஆறுச்சாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Coimbatore: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலை ஒடையகுளம் பகுதியில், தி.மு.க கவுன்சிலரின் கணவரை அரிவாளால் வெட்டி கையைத் துண்டித்த நபரை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம், ஆனைமலை அருகே உள்ள ஒடையகுளம் பேரூராட்சியின் 13-வது வார்டு கவுன்சிலராகப் பணியாற்றி வருபவர் விஜயவாணி. இவரது கணவர் முருகன் (52), தி.மு.க உள்ளூர் நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார்.

முருகனின் குடும்பத்தினருக்கும், அவரது வீட்டிற்கு அருகில் வசித்து வரும் ஆறுச்சாமி என்பவருக்கும் இடையே வீட்டின் எல்லை மற்றும் இடம் தொடர்பான பிரச்சனை காரணமாக நீண்ட நாட்களாக முன்விரோதம் நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் செப்டம்பர் 23 அன்று ஒடையகுளம் பேரூராட்சி அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (VAO) அலுவலகம் அருகே நடந்து சென்று கொண்டு இருந்த ஆறுச்சாமியிடம், முருகன் மீண்டும் இடம் தொடர்பாகத் தகராறில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது.
இதில் கடுமையான ஆத்திரம் அடைந்த ஆறுச்சாமி, தான் பையில் மறைத்து வைத்து இருந்த கூர்மையான அரிவாளை எடுத்து முருகனைச் சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் நிலைதடுமாறி ஓடிய முருகனை விடாமல் துரத்திச் சென்று மீண்டும் வெட்டியதில், முருகனின் வலது கை துண்டாகி ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார்.

முருகனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம், பக்கத்தினர் மற்றும் பொதுமக்கள், அவரை மீட்டு உடனடியாக வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு (CMCH) தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த ஆனைமலை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, தப்பியோட முயன்ற ஆறுச்சாமியை அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பேரூராட்சி அலுவலகப் பகுதியிலேயே தி.மு.க கவுன்சிலரின் கணவர் கை வெட்டப்பட்டுத் துண்டாக்கப்பட்ட சம்பவம் பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை வட்டாரப் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.