நீலகிரி மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பு பதவிகளுக்கு நேர்க்காணல்

நீலகிரி மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர்களுக்கான நேர்காணலில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டு, நேர்க்காணல் செய்தனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்ட திமுக ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் ஆதிதிராவிடர் நலக்குழு மாநில செயலாளரும் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணசாமி தலைமையில் இன்று நடைபெற்றது.



இந்த நிகழ்வில் நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் அனைவரையும் வரவேற்றார். மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை தலைவரும் வனத்துறை அமைச்சருமான மதிவேந்தன், இணை செயலாளர்கள் வி.பி.ராஜன் திப்பம்பட்டி ஆறுசாமி, கொடநாடு பொன்தோஸ் ஆகியோர் விண்ணப்பித்தவர்களிடம் நேர்காணல் நடத்தினர்.



அப்போது, இந்த பதவிகளுக்கு விண்ணப்பித்திருந்த உதகை, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட அனைத்து ஒன்றியங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. இந்த நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இதில் மாவட்ட திமுக துணை செயலாளர் ரவிகுமார், பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முஸ்தஃபா, இளங்கோவன், உதகை நகர செயலாளர் ஜார்ஜ் உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...