திருப்பூரில் பிப்.11 ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - ஆட்சியர் அறிவிப்பு

திருப்பூரில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் பிப்ரவரி 11ஆம் தேதி இளைஞர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.



திருப்பூர்: சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்குபெறும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் இளைஞர்களுக்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் வரும் பிப்ரவரி 11ஆம் தேதி சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடக்கிறது.



இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் ஆணையர் காந்தி குமார் பாடி தலைமையில் இன்று நடந்தது.

முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், பல்வேறு மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாகத் திருப்பூர் மாவட்டத்திலும் இந்த வேலை வாய்ப்பு முகமானது வரும் பிப்ரவரி 11ஆம் தேதி திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடக்க உள்ளது.

இந்த வேலை வாய்ப்பு முகாமில் 800-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று தகுதியுள்ள நபர்களைத் தேர்ந்தெடுக்க உள்ளது. இதன் மூலம் 10,000 மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப் பெறும்.

இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க இளைஞர்கள் https://tirupurjobfar.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களை அறிந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் வேலைவாய்ப்பு அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...