கோவையில் குடிபோதையில் லாரி கண்ணாடியை உடைத்து ஓட்டுனர் மீது தாக்குதல் - இளைஞர் கைது

கோவை எட்டிமடை அருகே சாலையில் தன்னை முந்திச் சென்ற லாரியின் கண்ணாடியை உடைத்து, லாரி ஓட்டுனரை தாக்கிய குடிபோதை ஆசாமி ராஜாவை பொதுமக்கள் பிடித்து கே.ஜி.சாவடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் எட்டிமடை அடுத்த கே.ஜி.சாவடி பகுதியை சேர்ந்தவர் ராஜா (30). லாரி ஓட்டுனரான இவர், நேற்று மாலை மது அருந்திவிட்டு குடிபோதையில் தனது இருசக்கர வாகனத்தில் எட்டிமடையில் இருந்து திருமலையாம்பாளையம் சென்று திரும்பியுள்ளார்.

இந்நிலையில், மீண்டும் எட்டிமடையை நோக்கி சென்ற போது அவ்வழியாக சோப்பு லோடு ஏற்றிக்கொண்டு கேரளா நோக்கி சென்ற லாரி, ராஜாவின் இருசக்கர வாகனத்தை முந்தி சென்றதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ராஜா லாரியை பின்னால் துரத்திச் சென்று எட்டிமடை அருகே மடக்கி பிடித்துள்ளார். பின்னர் சாலையில் கிடந்த கல்லை எடுத்து லாரியின் முன்பக்க கண்ணாடியை உடைத்துவிட்டு, லாரி ஓட்டுநர் பிரபாகரனை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் மதுபோதையில் இருந்த ராஜாவை மடக்கி பிடித்து, லாரி ஓட்டுநரை அவரிடம் இருந்து மீட்டனர். இதனை தொடர்ந்து, கே.ஜி.சாவடி காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த கே.ஜி.சாவடி போலீசார் மதுபோதையில் தாக்குதல் நடத்திய ராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், காயமடைந்த லாரி ஓட்டுநர் பிரபாகரன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...