கோவை வால்பாறை அருகே இறந்த நிலையில் மீட்கப்பட்ட காட்டெருமை - வனத்துறையினர் ஆய்வு

வால்பாறை அடுத்த கருமலை எஸ்டேட் அருகேயுள்ள வனப்பகுதியில் காட்டெருமை இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, வனத்துறையினர் காட்டெருமையின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வனவிலங்குகள் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், வால்பாறை அடுத்த கருமலை எஸ்டேட் குடியிருப்பு பகுதி அருகே சிறிய வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் காட்டெருமை, கரடி, மான், யானைகள் போன்ற ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

இதனிடையே இந்த வனப்பகுதியில் 4 நாட்களுக்கு முன்பு 2 காட்டெருமைகள் சண்டையிட்டு கொண்டதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இந்நிலையில் இன்று வனப்பகுதியில் துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது.



அப்போது அருகில் சென்று பார்த்த போது, காட்டெருமை ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதனை கண்ட அவ்வழியே சென்றவர்கள், வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.



இதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த வனச்சரகர் வெங்கடேஷ் தலைமையிலான வனத்துறையினர், ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் இறந்த காட்டு எருமையின் உடலில் காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



அதில், 4 நாட்களுக்கு முன்பு 2 காட்டெருமைகள் சண்டை போட்டுக் கொண்டதில் ஒரு காட்டெருமைக்கு காயங்கள் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

இறந்த காட்டு எருமையின் உடலை வனத்துறை மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு அடக்கம் செய்யப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...