'மேட்டுப்பாளையத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் நந்தவனம் மேம்படுத்தப்படும்..!' - ஆ.ராசா எம்.பி., தகவல்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் பவானி ஆற்றில் ஈமகாரியங்கள் செய்யும் நந்தவனத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இரண்டு நாட்கள் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக, மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை அவர் ஆய்வு செய்தார்.



நகராட்சி பகுதியில் உள்ள வசந்தம் நகரில் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா மற்றும் யோகா பயிற்சி மையத்தை, ஆ.ராசா மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.



மேலும், மணிநகர் அரசுப்பள்ளி அருகே ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அறிவு சார் மையத்தின் கட்டுமான பணிகள் மற்றும் நீரேற்று நிலையத்தினையும் அவர் ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து, பழுதடைந்துள்ள நெல்லித்துரை சாலை மற்றும் மேட்டுப்பாளையத்தில் முன்னோர்களுக்கு பவானி ஆற்றில் தர்ப்பணம் கொடுக்கவும், ஈம காரியங்கள் செய்ய அனைத்து இந்து சமுதாய நலச்சங்கம் நிர்வகிக்கும் நந்தவனம் பகுதியினை ஆய்வு மேற்கொண்டு அங்கு பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது, நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கை வைத்த நிலையில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய படித்துறை கட்டுதல், கழிவறை, குளிப்பதற்கு குளியல் அறை போன்றவற்றை உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆ.ராசா அப்போது உறுதியளித்தார்.

அதேபோல், மேட்டுப்பாளையம் பத்திரகாளியம்மன் கோவில் சாலை நீண்டகாலமாக பழுதடைந்த நிலையில் உள்ளதால், அதனையும் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் செப்பனிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.



இதனைத் தொடர்ந்து, மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நிகழ்ச்சியில் ஆ.ராசா கலந்துகொண்டு, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

இந்த நிகழ்ச்சியின்போது மேட்டுப்பாளையம் வட்டாட்சியர், நகர்மன்ற தலைவர் மெஹரீபா பர்வீன், துனை தலைவர் அருள்வடிவு மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...