'தேர்தலில் வெற்றிப் பெற்று மகன் விட்டுச் சென்ற பணியை தொடர்வேன்' - ஈவிகேஎஸ் இளங்கோவன் உறுதி

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளராக காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.



அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,



ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைப்பதற்கு மறுமலர்ச்சி திராவிட கழகம் உறுதுணையாக இருக்கும் என்றார்.

எதிரிக்கு டெபாசிட் போய்விட்டது என்ற நிலையை உருவாக்குவதற்கு எங்கள் கட்சியை சார்ந்தவர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஆளுநர் சனாதன ஆட்சியை நடத்திக்கொண்டு வருகிறார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி சிறப்பான வெற்றி பெறும், என்றார்.

இதனைத் தொடர்ந்து பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்,



மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் எங்களுக்கு ஆதரவு வழங்குவது மட்டுமல்லாமல் வைகோ நேரடியாக களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளோம். தமிழ்நாட்டில் ஒரு காவல் வீரனாகவும், போர் வீரனாகவும், தமிழ்நாடு முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார். அவரின் அன்பின் காரணமாக வரும் தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

என் மகன் விட்டுச்சென்ற பணியை நான் இத்தேர்தலில் வெற்றிபெற்று தொடர்வேன். பாஜக தேர்தலில் போட்டியிட்டால் நாங்களை அக்கட்சியை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு பாஜகவினருக்கு தோல்வியை பெற்று தருவோம், என்றார்.

Newsletter

ஜனவரி முதல் செப்டம்பர் வரை கோவையில் 132 பேர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

கோவை மாநகரில் 2026 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 9 வரை பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக 132 பேர் மீத...

Jan to Sep: 132 Offenders Placed Under Preventive Detention in Coimbatore

A total of 132 persons involved in various criminal activities were preventively detained under the Tamil Nadu Preventio...

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...