கோவை புரூக் பீல்டு சாலை மாதிரி ரவுண்டானாவில் திடீர் ஆய்வு!

கோவை புரூக் பீல்டு சாலையில் மாதிரி ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளதைத் துணை ஆணையாளர் மதிவாணன் ஆய்வு.


கோவை: கோவை புரூக் பீல்டு சாலை சந்திப்பில் பொதுமக்கள் சிக்னலுக்காக காத்திருக்காமல் விரைவாகச் சாலையைக் கடக்கச் சோதனை முயற்சியாக மாதிரி ரவுண்டானா அமைக்கப்பட்டது.



கோவை புரூக் பீல்டு சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், மக்கள் சிக்னலுக்காக காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கும் முயற்சியாகக் கோவை மாநகர காவல் போக்குவரத்து பிரிவு சார்பாகச் சோதனை முயற்சியாக, சாலை பாதுகாப்பு கோட்ட பொறியாளர் மனுநீதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் இணைந்து மாதிரி ரவுண்டானா அமைத்தனர்.

அதற்கான சோதனை ஓட்டம் மாலை 4 மணி முதல் நடைபெற்று வருகிறது. இதனால் கிழக்கு திருவேங்கடசாமி சாலை வழியாக புரூக் பீல்டு செல்லும் வாகன ஓட்டிகள், இடது புறமாகத் திரும்பி சிந்தாமணி ரவுண்டானா வழியாக புரூக் பீல்டு சாலைக்குச் செல்லுமாறு போக்குவரத்து போலீசார் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.



மேலும் கிழக்கு திருவேங்கடசாமி சாலையிலிருந்து காமராஜபுரம் வழியாக புரூக் பீல்டு சாலை செல்லும் பாதை தடை செய்யப்பட்டுள்ளது. அங்குச் செய்யப்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப பயணம் மேற்கொள்ளலாம்.

எனவே பொதுமக்கள் நலன் கருதி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முயற்சிக்குப் பொதுமக்களின் ஆதரவு அளிக்குமாறு போக்குவரத்துத் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.



இந்த மாதிரி ரவுண்டானாவை துணை ஆணையாளர் மதிவாணன் ஆய்வு மேற்கொண்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...