குட்டியுடன் புகுந்த காட்டு யானைகள் - 'போ ராஜா போ' என்று பாசத்துடன் விரட்டியடித்த கோவை கிராம மக்கள்..!

கோவை தொண்டாமுத்தூர் தாளியூர் அருகே கிராமத்திற்குள் குட்டியுடன் புகுந்த காட்டு யானைகளை கிராம மக்கள் அன்பான வார்த்தைகளால் கூறி விரட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.



கோவை: கோவை தொண்டாமுத்தூர் அடுத்த தாளியூர் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமத்தில், இன்று அதிகாலையில் குட்டியுடன் ஐந்து காட்டு யானைகள் புகுந்தன. அங்கிருந்த சாலையை அவை கடந்து சென்றன.



அதைப் பார்த்த குடியிருப்புவாசிகள், காட்டு யானைகளை "போ ராஜா போ" என அன்பான வார்த்தைகளைக் கூறி விரட்டினர்.



இதையடுத்து, அந்தக் காட்டு யானைகள் அருகிலிருந்த வனப்பகுதிக்குள் சென்றன. இந்த காட்சிகளை அங்கிருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். காட்டு யானைகளை கிராம மக்கள் அன்பான வார்த்தைகளால் பேசி விரட்டும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவிவருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...