நீலகிரி மலை ரயிலை மறித்த காட்டுயானைக் கூட்டம் - அச்சத்தில் உறைந்த பயணிகள்!

நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் சென்ற மலை ரயிலை திடீரென காட்டுயானைக் கூட்டம் ஒன்று வழிமறித்ததால் பயணிகள் அச்சத்தில் உறைந்தனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் காட்டுயானைக்கூட்டம், கடந்த சில நாட்களாக முகாமிட்டுள்ளது. அவ்வப்போது உணவிற்காக மலைப்பாதையிலும், மலை ரயில் பாதையிலும் முகாமிடுவதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது.



இந்த நிலையில், நேற்று மாலை குன்னுரிலிருந்து மேட்டுப்பாளையம் சென்ற மலை ரயிலை காட்டுயானைக் கூட்டம் திடீரென வழிமறித்தது. இதனால், மலை ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது.



சுமார் அரை மணி நேரம் ரயில்பாதையில் நின்ற காட்டுயானைகள் பின்னர் வனப்பகுதிக்குள் சென்றன. இதனால், ரயிலில் இருந்த சுற்றுலாபயணிகள் நிம்மதியடைந்தனர். மலை ரயிலை காட்டுயானை வழிமறித்த சம்பவத்தால், பயணிகளிடையே சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...