திண்டுக்கல்லில் துணிவு படப் பாணியில் வங்கியில் கொள்ளை முயற்சி

திண்டுக்கல்லில் பட்டப் பகலில் வங்கியில் புகுந்து கொள்ளையடிக்க முயன்றவரைப் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைப்பு.



திண்டுக்கல்: சினிமா படப் பாணியில் பட்டப்பகலில் மர்மநபர் வங்கியில் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்-தாடிக்கொம்பு சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. இந்த வங்கியில் இன்று காலை மூன்று ஊழியர்கள் பணியிலிருந்துள்ளனர். அப்பொழுது ஆயுதங்களுடன் உள்ளே வந்த மர்மநபர் ஊழியர்கள் மீது ஸ்பிரே அடித்ததோடு, அவர்களைக் கட்டிப்போட்டு, கொள்ளையடிக்க முயன்றுள்ளார்.

இந்நிலையில் வங்கி ஊழியர் ஒருவர் வெளியே ஓடி வந்து பொதுமக்களைப் பார்த்து கொள்ளை, கொள்ளை கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து பொதுமக்கள் வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற மர்மநபரைப் பிடித்து காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீசார் மர்மநபரைக் கைது செய்து காவல்நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், திண்டுக்கல் பூச்சி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த கலீல் ரகுமான்(25) என்பதும், வாழ்க்கை வெறுத்து விட்டதால் துணிவு உள்ளிட்ட சினிமா படங்களையும் பார்த்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.

பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் சாலையில் பட்டப்பகலில் வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...