உடுமலையில் அமமுக சார்பில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

உடுமலையில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அமமுக சார்பில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் சண்முகவேலு பங்கேற்பு.


திருப்பூர்: உடுமலையில் மத்திய பேருந்து நிலையம் முன்பு அமமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மத்திய பேருந்து நிலையம் முன்பு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் சண்முகவேலு கலந்து கொண்டார்.



இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கோவை மண்டலச் செயலாளருமான சண்முகவேலு பேசியதாவது,

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் ஆட்சிக் காலத்தில் ஏழை எளிய மாணவர்களுக்குச் சத்துணவுத் திட்டம், புத்தகங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

அவற்றைப் பின்பற்றி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலிருந்து இன்றளவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் உடுமலையில் பல ஆண்டு காலமாகச் செயல்பட்டு வரும் மின்வாரியம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் தற்சமயம் பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்யப்படுவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

உடுமலை பகுதியில் மின்வாரிய மேற்பார்வை அலுவலகம் இருப்பது சிறந்தது. பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்யக்கூடாது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உடுமலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட படுமானால் போராட்டத்தில் ஈடுபடுவோம். தற்போது பழனி மாவட்டம் ஒன்று உருவாக்கி மடத்துக்குளம் பகுதி இணைப்பதற்கான வேலைகளும் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

எக்காரணத்தைக் கொண்டும் பழனி பகுதியில் மடத்துக்குளத்தை இணைக்க மாட்டோம். அமமுக தொடர்ந்து எதிர்க்கும், என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...