சீட்டாட்டத்தில் பணத்தை இழந்ததால் ஆத்திரம் - நண்பர்களைக் கடத்தி நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து மிரட்டிய 7 பேர் கைது!

பல்லடம் அருகே சூதாட்டத்தில் பணத்தை இழந்த ஆத்திரத்தில் நண்பர்களை கடத்தி நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய 7 பேர் கைது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நண்பர்களை கடத்தி நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்லடத்தை அடுத்த அருள்புரம் பகுதியை சேர்ந்த பிரபாகர்(வயது30), அங்குள்ள பனியன் நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தனது நண்பர்களான பிரகாஷ்(வயது38) மற்றும் மனோஜ்(வயது26) ஆகியோருடன் வீட்டில் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவது வழக்கம்.

இந்நிலையில், பிரபாகரின் நண்பர் உசிலம்பட்டியை சேர்ந்த மாசாணம்(வயது30) என்பவரும் சூதாட்டத்தில் பணம் வைத்து விளையாடியுள்ளார்.

சீட்டாட்டத்தில் அதிக அளவு பணத்தை இழந்ததால் ஆத்திரம் அடைந்த மாசாணம், தனது நண்பர்களான தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ராஜா(வயது25), துரைபாண்டி(வயது22) மற்றும் மருதுபாண்டி(வயது22), திருவள்ளூரை சேர்ந்த மகேஷ்(வயது42), சென்னை அண்ணா நகரை சேர்ந்த மணிகண்டன்(வயது31), திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த பரத்குமார்(வயது 25) ஆகியோருடன் சென்று பிரபாகர் மற்றும் அவரது நண்பர்கள் பிரகாஷ் மற்றும் மனோஜ் ஆகியோரை சரமாரியாக தாக்கி மாசாணம் வீட்டிற்கு காரில் கடத்திச்சென்றுள்ளனர்.

பின்னர், அங்கு வைத்து மூவரையும் அடித்து உதைத்து சித்தரவதை செய்ததோடு நிர்வாணமாக்கி வீடியோவும் எடுத்துள்ளனர். ஐந்து லட்சம் பணம் கேட்டு அவர்களை மிரட்டியதோடு தரமறுத்தால் வீடியோவை வெளியிடப் போவதாகவும் மிரட்டி அனுப்பியுள்ளனர்.

அங்கிருந்து தப்பி வந்த பிரகாஷ், பல்லடம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவுசெய்த போலீசார், மாசாணம் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.



பின்னர் கைது செய்யப்பட்ட 7 பேரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...