பல்லடத்தில் குடியரசு தினம் - தமமுக சார்பில் ரத்ததான முகாம்

74வது குடியரசு தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனையில் தமமுக சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் திருப்பூர் தெற்கு மாவட்டம், திருப்பூர் அரசு மருத்துவமனை மற்றும் பல்லடம் அரசு மருத்துவமனை இணைந்து 74 வது குடியரசு தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் நடத்தியது.



பல்லடம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இந்த ரத்ததான முகாமில் 80க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரத்தம் வழங்கினர்.



இந்த முகாமில் சேகரிக்கப்பட்ட ரத்தம் திருப்பூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.



இந்த ரத்ததான முகாமில் திமுக நிர்வாகிகள், மமக நிர்வாகிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...