உடுமலையில் காரை வழிமறித்து பெண்ணுக்கு கொலை மிரட்டல் - 4 பேர் கைது

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குமரலிங்கத்தில் காரை வழிமறித்து பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


திருப்பூர்: கோவை அருகே உள்ள நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் செண்பகவள்ளி (வயது45). இவர் நேற்று முன்தினம் உடுமலை அருகே ருத்ராபாளையத்தில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தை பார்த்துவிட்டு, தனது தம்பி முறையான தேவேந்திரனுடன் காரில் கோவை திரும்பிக்கொண்டு இருந்தார்.

குமரலிங்கம் பகுதியில் ஒரு பேக்கரி முன்பு வந்தபோது வேகமாக பைக்கில் வந்த 4 பேர் கார் முன்பு பைக்கை நிறுத்தி வழிமறித்து உள்ளனர். இதையடுத்து செண்பகவள்ளியை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.



மேலும், செங்கல்லால் கார் கண்ணாடிகளை உடைத்துவிட்டு தப்பினர். இதுகுறித்து செண்பகவள்ளி அளித்த புகாரின்பேரில், குமரலிங்கத்தை சேர்ந்த கர்ணன் (வயது42), ஐயப்பன் (வயது42), திவாகர் (வயது26), இடுவாயை சேர்ந்த மணிகண்டன் (வயது28) ஆகிய 4 பேர் மீது குமரலிங்கம் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...