உடுமலை சின்னவீரன்பட்டி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேக விழா

உடுமலை சின்ன வீரன் பட்டியில் நாளை கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுத்து பெண்கள் வழிபாடு.


திருப்பூர்: உடுமலை அருகே சின்னவீரன்பட்டியில் புகழ்பெற்ற ஸ்ரீ பெரிய விநாயகர், ஸ்ரீ தன்னாட்சியப்பன் ஸ்ரீ துர்க்கை அம்மன் திருக்கோவில்களில் நன்னீராட்டு பெருவிழா நடைபெறவுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள சின்னவீரன்பட்டியில் பல ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ பெரிய விநாயகர், ஸ்ரீ தன்னாட்சியப்பன் ஸ்ரீ துர்க்கை அம்மன் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நாளை காலை 9 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் பேரூர் சாந்த லிங்கம் மருதாசல அடிகளார் தலைமையில் நடைபெற உள்ளது.



இந்நிலையில் இன்று சின்னவீரன்பட்டி காளியம்மன் கோவிலிலிருந்து முக்கிய வீதி வழியாக 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பாரம்பரியமான வாத்தியத்துடன் முளைப்பாரி, தீர்த்த கலசங்கள் எடுத்து ஊர்வலமாகச் சென்றனர்.



பின்னர் விநாயகர் கோவிலில் உள்ள விநாயகருக்கு அபிஷேகங்கள் மேற்கொள்ளப்பட்டது. திருக்குட நன்னீராட்டு பெருவிழாவிற்கான ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...