நன்றி.. வாழ்க தமிழ்நாடு... வளர்க பாரதம்..! - தமிழ்நாடு என்று குறிப்பிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

தமிழ்நாட்டில் தமிழகம் என்ற ஆளுநர் பேசியது சர்ச்சையான நிலையில், தேர்தல் ஆணையம் விழாவில் கலந்துக் கொண்டு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, நன்றி... வாழ்க தமிழ்நாடு.. வளர்க பாரதம் என்று பேச்சு.


கோவை: 13வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, "வாக்களிப்பதே சிறந்தது, நிச்சயம் வாக்களிப்பேன்" என்பதை நோக்கமாக கொண்டு இந்திய தேர்தல் ஆணையம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக சென்னை வாலஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் பள்ளி மாணவ - மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு, வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு பாடல்கள் அடங்கிய சிடி, பாக்கெட் சைஸ் வாக்காளர் குறிப்பேடு ஆகியவற்றை வெளியிட்டார்.

மேலும், தேர்தல் மற்றும் வாக்காளர் பட்டியல் சேர்ப்பு உள்ளிட்ட பணிகளில் சிறப்பாக செயல்பட்ட அரசு அதிகாரிகளுக்கு விருது, வாக்காளர் தினத்தையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகள், சுய உதவிக்குழுக்களுக்கு பரிசுத்தொகையை வழங்கினார்.



பின்னர் விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, நாட்டில் ஜனநாயகத்தினை சிறப்பாக செயல்படுத்துவதற்கு மிக முக்கிய பங்காக இருப்பது வாக்காளர்களே. 940 மில்லியன் வாக்காளர்கள் இந்தியாவில் உள்ளனர். இவர்களை சிறப்பாக ஒருங்கிணைத்து தேர்தலை நடத்துவது என்பது மிக கடினமான ஒரு வேலை. ஆனால் இந்திய தேர்தல் ஆணையம் அதனை சிறப்பாக செய்து வருகிறது.

விவிஎம் இயந்திரத்தை அறிமுகப்படுத்திய போது சிலர் ஆதரித்தனர். பலர் எதிர்த்தனர். இந்திய தேர்தல் ஆணையம் அதன் உண்மைத்தன்மையை நிரூபித்தது. பல முன்னேறிய நாடுகளுக்கு இந்த முறை முன்ணுதாரணமாக உள்ளது.

கடந்த 3 - 4 நாடாளுமன்ற தேர்தல்களில் பெண்களின் வாக்கு சதவிகிதம் அதிகரித்து அரசை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. பிற தேர்தல்களிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது.



இந்தியாவில் இளைஞர்களின் சக்தி அதிகமாக உள்ளது. இந்திய அரசியலில் மாற்றத்தை தீர்மானிக்க கூடியவர்களாக உள்ளனர்.18-வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்றதற்கான வரலாற்று சான்றுகள் உள்ளன. இதுபோல நாட்டின் பல பகுதிகளிலும் உள்ளன. 2047 -ல் இந்தியா உலக நாடுகளின் தலைவராக உயரும்.

நம் நாட்டின் கலாச்சாரம், பண்பாடு பிற நாடுகள் உற்று நோக்கும் வகையில் உள்ளது. உலக பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் நாடாகவும் உள்ளது. இந்திய தேர்தலில் இளம் பெண்கள் வாக்களிக்க இந்திய அரசு அளித்த உரிமையானது மாபெரும் ஜனநாயக வெற்றி.

இந்த நாட்டின் வெற்றியை தீர்மானிப்பதில் வாக்காளர்களின் வாக்கு என்பது மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்று பேசிக் கொண்டிருந்த ஆளுநர், நன்றி! வாழ்க தமிழ்நாடு... வளர்க பாரதம்...", என உரையை முடித்தார்.

தமிழகம் என்ற வார்த்தை சர்ச்சை வெடித்த நிலையில், தற்போது தமிழ்நாடு என்று குறிப்பிட்டு ஆளுநர் பேசியது தமிழ்நாடு அரசியல் களத்தில் முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.

Newsletter

Flights Temporarily Diverted to Kochi After Compound Wall Collapse Near Coimbatore Airport

Following heavy rain and strong winds in Coimbatore today evening, a section of the compound wall near Coimbatore Intern...

கனமழை எதிரொலி: கோவை விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் விமானங்கள் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டது

கோவையில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றால் சின்னியம்பாளையம் அருகே கோவை சர்வதேச விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்...

“Jayalalithaa’s Soul Is Punishing the AIADMK,” Says TVK Minister Sengottaiyan in Coimbatore

TVK Minister Sengottaiyan  launched a sharp attack on the AIADMK, stating that the party’s ongoing internal turmoil was...

Simplicity News Impact: Coimbatore Airport Authorities Restore Drinking Water Facility

Passengers and members of the public appreciated the swift action taken by airport authorities to restore the malfunctio...

நொய்டா தொழிலாளர்களுக்கு ஆதரவாக கோவையில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து கோவையி...

Prioritise Safety Measures: Salem ADRM Urges During Inspection at Tiruppur Railway Station

Salem Additional Divisional Railway Manager (ADRM) R. Saravanan inspected the ongoing Amrit Bharat Scheme works and main...