பனிக்காலத்தில் விமானங்களை இயக்குவதில் ஏற்படும் சிரமங்கள் என்ன? - மூத்த விமானி பகத்சிங் தகவல்!

பனிக்காலத்தில் விமானங்கள் புறப்பாடு மற்றும் தரையிறங்கும் நிகழ்வுகளை விட தரையிறங்கிய பின் விமான நிறுத்துமிடம் வரை ஓட்டி செல்வதே மிகுந்த சவாலானது என விமானி பகத்சிங் தெரிவித்தார்.



கோவை: பனிக்காலத்தில் விமானங்கள் இயக்குவது குறித்து தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த விமானி பகத்சிங் கூறியதாவது:



இந்தியா மட்டுமின்றி உலகளவில் பனிக்காலத்தில் விமானங்களை இயக்குவதில் பல்வேறு சிரமங்களை விமானிகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இன்றைய நவீன உலகில் பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் விமானத்துறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் டெல்லி, லக்னோ உள்ளிட்ட நகரங்களில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் பனியின் தாக்கம் மிக அதிகளவில் இருக்கும். ஒவ்வொரு முறையும் விமானங்கள் புறப்படும் போதும் தரையிறங்கும் போதும் விமானிங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.



இருப்பினும் மிகுந்த சவால் என்பது விமானத்தை தரையிறக்கிய பின் ஓடுதளத்தில் இருந்து பத்திரமாக விமானம் நிறுத்துமிடம் வரை ஓட்டி செல்வதில் தான் உள்ளது.

பொதுவாக விமானம் புறப்படும் போதும், தரையிறங்கும் போதும் பிரத்யேக பயிற்சி பெற்ற ஊழியர்கள் விமானிகளுக்கு பல்வேறு சைகைகள் மூலம் உதவி செய்வார்கள். பனிக்காலங்களில் குறிப்பாக இந்தியாவின் வடமாநிலங்களில் இத்தகைய பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.



விமானத்தின் அருகே அவர்கள் நின்ற போதும் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக பணியை துரிதமாக மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும்.

அதிக பனிமூட்டம் நிலவும் விமான நிலையங்களில் உதாரணமாக சாதாரண நாட்களில் ஒரு மணிநேரத்துக்கு 10 விமானங்களை இயக்கினால், பனிக்காலத்தில் அதே ஒரு மணிநேரத்தில் 2 விமானங்களை மட்டுமே இயக்க முடியும். அந்த அளவு நிலைமை படுமோசமாக இருக்கும்.

பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒவ்வொரு நடவடிக்கையும் மிகுந்த எச்சரிக்கையுடன் மேற்கொள்ளப்படும், என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...