உடுமலை எஸ்.வி.புரத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு - பொதுமக்கள் அவதி

உடுமலை எஸ்.வி.புரம் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால், அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை.


திருப்பூர்: எஸ்.வி.புரம் பகுதியில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளால் பொதுமக்கள் மற்றும் வாகன ஒட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை கொழுமம் ரோடு எஸ்.வி.புரம் வழியாக 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு, பிரதான வழித்தடமாக உள்ளது. நூற்றுக்கணக்கான வாகனங்கள், பொதுமக்கள் பயன்படுத்தும் நெரிசல் மிகுந்த இந்த சாலையின், நகரப்பகுதியில் சுமார் 2 கி.மீ., தூரத்திற்கு இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன.

மேலும், சாலையை ஆக்கிரமித்து, பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. பிரதான வழித்தடமாக உள்ள இந்த சாலையை, அகலப்படுத்தும் வகையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

இதைத் தொடர்ந்து அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், மீண்டும் சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து, போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் அதிகரித்து வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பொதுமக்கள் சார்பில் தமிழ்நாடு முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...