பொள்ளாச்சி அருகே கராச்சேரியில் கிராம சபை கூட்டம் - மாவட்ட ஆட்சியர் சமீரன் பங்கேற்பு

கிணத்துக்கடவு அருகே கராச்சேரியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன் பங்கேற்று தூய்மை காவலர்களுக்கு சால்வை அணிவித்துப் பாராட்டு.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கராச்சேரியில் குடியரசு தின விழாவை ஒட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.



பொதுமக்கள் கூறிய கருத்துக்களைக் கிராம சபைக் கூட்டத்தில் உள்ள பதிவேட்டில் பதியும்படி அறிவுறுத்தினார்.

அதன் பின்னர் அரசம்பாளையம் ஊராட்சியில் உள்ள தூய்மை காவலர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.



பின்னர் மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் பெண் குழந்தை பாதுகாப்பு மற்றும் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்த உறுதி மொழியை பொதுமக்கள் எடுத்துக் கொண்டனர்.

அதன் பின்னர் பொதுமக்களிடமிருந்து ஆட்சியர் சமீரன் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.



இதில் அரசம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜ், பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா உட்பட அனைத்துதுறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...