மேட்டுப்பாளையம் அருகே மசூதியில் வழிபாடு நடத்துவதில் தகராறு - இருவர் காயம்

மேட்டுப்பாளையம் அருகே பழமையான பெள்ளாதி தர்க்காவில் வழிபாடு நடத்துவதில் சுன்னத் ஜமாத் மற்றும் தவ்ஹீத் ஜமாஅத் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் கட்டையால் தாக்கிக் கொண்டதில் இருவர் காயம்.


கோவை: மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெள்ளாதியில் பழமையான தர்காவில் இருதரப்பினர் இடையே வழிபாடு நடத்துவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் இருவர் காயமடைந்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெள்ளாதியில் மிக பழமையான தர்கா உள்ளது.இந்த தர்காவை சுன்னத் ஜமாத் அமைப்பினர் நிர்வகித்து வரும் நிலையில், இந்த தர்காவில் தொழுகை நடத்த ஜக்கிய ஜமாஅத் அமைப்பினர் மற்றும் சுன்னத் ஜமாத் அமைப்பினர் இடையே இன்று பிரச்னை ஏற்பட்டு உள்ளது.

ஜக்கிய ஜமாஅத் பிரிவினர் தொழுகை நடத்த வந்த போது, மற்றொரு தரப்பான சுன்னத் ஜமாத் அமைப்பினர் கதவை மூடியதால் பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் பிரச்னை முற்றிக் கைகலப்பாக மாறி, இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.



இதில் தவ்ஹீத் ஜமாஅத் சேர்ந்த முகமது இஸ்மாயில், நசீர் ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



இது சம்பந்தமாக காரமடை போலீசார் வழக்குப் பதிவு செய்து சுன்னத் ஜமாத் அமைப்பினர் மூன்று பேரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மசூதியில் வழிபாடு மேற்கொள்ள இரு தரப்பினரும் மோதி கொண்ட சம்பவம் மேட்டுப்பாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...