கிணத்துக்கடவு அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு - சாலையைக் கடக்க முயன்றபோது விபத்து

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே தாமரைகுளத்தில் சாலையை கடக்க முயன்ற பெண் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. பலத்த காயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.


கோவை: தாமரைகுளத்தில் சாலையை கடக்க முயன்ற பெண் மீது கார் மோதியதால், சம்பவ இடத்தில் பலியானார்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆர். பொன்னாபுரம் பகுதி சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி கமலவேணி இன்று காலை கிணத்துக்கடவு அருகே உள்ள செட்டிக்காபாளையத்தில் உள்ள உறவினரின் துக்க நிகழ்ச்சிக்காக வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சியில் இருந்து தனியார் பேருந்தில் ஏறி தாமரைக்குளம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சாலையை கடக்க முயன்றார். அப்போது பொள்ளாச்சியில் இருந்து வேகமாக வந்த கார் கமலவேணி மீது மோதியது. பலத்த காயமடைந்த கமலவேணி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவ இடத்திற்கு சென்ற கிணத்துக்கடவு போலீசார் கமலவேணியின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் காரை ஓட்டி வந்த பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த விசாகரத்தினம் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...