உதகை அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்ற கோவில் திருவிழா - பாரம்பரிய நடனமாடிய தோடர்கள்!

நீலகிரி மாவட்டம் உதகை அருகே பொள்சி எனும் அழைக்கப்படும் கோவில் திருவிழாவில் தோடர் இன ஆண்கள் மட்டுமே பங்கேற்பு. இந்த திருவிழாவில் பெண்கள் பங்கேற்க அனுமதி இல்லை.



நீலகிரி: உதகை அருகே 70 கிராம தோடர் இன ஆண்கள் பங்கேற்ற திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் தோடர் இன ஆதிவாசி மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். மந்து என்று அழைக்கப்படும் 70 கிராமங்களில் சுமார் 2000 தோடர் இன மக்கள் உள்ளனர். இந்த மக்களின் பாரம்பரியமும், கலாச்சாரமும் வினோதமானதாகவே உள்ளது.

இந்த நிலையில் உதகை அருகே உள்ள தாரநாடு மந்து தோடர் இன மக்களின் கோவில் ஒன்று சோலூர் அருகே அமைந்துள்ளது.



இக்கோவில் 10 ஆண்டுகளுக்குப் பின் புதுப்பிக்கப்பட்டது. அதற்காக 30 நாட்கள் விரதம் இருந்த தோடர் இன ஆண்கள் அப்பர்பவானி பகுதிக்குச் சென்று அவுல் என்ற புற்களையும், பெரம்பு, மூங்கில் போன்றவற்றையும் எடுத்து வந்து கோவிலை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

புதுபிக்கப்பட்ட இந்த கோவிலில் இன்று பொள்சி என்று அழைக்கப்படும் திருவிழா நடைபெற்றது. தோடர் இன மக்கள் தங்களது பாரம்பரிய முறைபடி கோவிலின் முன்பு ஒன்று கூடிய மண்டியிட்டு வணங்கினர்.



இதனையடுத்து கோவிலின் வாயிலின் முன்புறத்தில் பாரம்பரிய நடனத்தை மூத்த தோடர் இன ஆண்கள் ஆடினர்.



இதனையடுத்து அருகில் உள்ள புல்வெளியில் ஒன்று திரண்ட தோடர் இன ஆண்கள் ஒருவருக்கு ஒருவர் கைகளைக் கோர்த்து வட்டமாக நின்று தங்களுடைய பாரம்பரிய நடனத்தை ஆடினர்.



பெண்களுக்கு இந்த கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...