கோவை அருகே விவசாய தோட்டத்தில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டுயானை - வைரலாகும் வீடியோ!

பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த கோவனூர் பகுதியில் விவசாயத் தோட்டத்தில் புகுந்த ஒற்றைக் காட்டுயானை 10க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை தின்று சேதப்படுத்திச் சென்றது. காட்டு யானை தோட்டபகுதிக்குள் சுற்றித் திரியும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


கோவை: பெரியநாயக்கன்பாளையம் அடுத்த கோவனூர் பகுதியில் உள்ள தோட்டத்தில் ஒற்றை யானை புகுந்து 10-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தியது.

கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த பாலமலை வனப்பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இவைகளில் சில யானைகள் உணவு தேடி அவ்வப்போது மலை அடிவாரப் பகுதிகளில் உள்ள தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது தொடர் கதையாகி வருகிறது.



இந்த நிலையில், நேற்று மாலை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்து உள்ள கோவனூர் பகுதியில் ஒற்றை காட்டு யானை உணவு தேடி வந்துள்ளது.



அங்கிருந்த குணா என்பவரது தோட்டத்திற்குள் இரவில் புகுந்த அந்த ஒற்றைக் காட்டுயானை, அங்கிருந்த 10க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை தின்று சேதப்படுத்திச் சென்றது. காட்டு யானை தோட்டபகுதிக்குள் சுற்றித் திரிவதை அங்கிருந்தவர்கள் செல்போனில் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...