திருப்பூரில் புதர் மண்டி கிடக்கும் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் - சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவரும் அவலம்..!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மருள்பட்டியில் உள்ள வீட்டு வசதி வாரியம் மூலம் கட்டப்பட்ட 300 குடியிருப்புகள் பராமரிப்பின்றி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ளது கண்ணமநாயக்கனூர் ஊராட்சி. இங்குள்ள மருள்பட்டி பகுதியில் 1994ஆம் ஆண்டில் வீட்டு வசதி வாரியத்தால், 20 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, சிறிய மற்றும் நடுத்தர நகரிய திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட அப்போதைய அதிமுக ஆட்சி காலத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில் அப்பகுதி களிமண் பரப்பாக இருப்பதால், வீடுகள் கட்ட எதிர்ப்புகள் எழுந்தன. இருப்பினும், 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 300 வீடுகள் கட்டும் பணிகள் வீட்டு வசதி வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டது. ஏ, பி, சி, என மூன்று பிரிவுகளில் வீடுகளும், அனைத்து கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன.

இதனிடையே, போதிய பேருந்து வசதி இல்லாதது உட்பட பல்வேறு காரணங்களால், வீடுகளை ஏலம் எடுக்க அரசு அலுவலர்கள் மற்றும் இதர தரப்பினர் முன் வரவில்லை.



இதனால், 300 வீடுகளும் காட்சிப்பொருளாக மாறி 20 ஏக்கரில் அமைந்த குடியிருப்பு வளாகம் முழுவதும் புதர் மண்டி கிடக்கிறது.

இந்நிலையில், வீடுகளில் இருந்த இரும்பு ஜன்னல்கள், தொட்டி உட்பட பல்வேறு பொருட்கள் ஏற்கனவே மாயமான நிலையில், தற்போது சில வீடுகள் இடிந்து, கான்கிரீட் மேற்கூரையில் இருக்கும் கம்பிகள் வெளியே தெரிகிறது.



குடியிருப்புக்காக ஏற்படுத்தப்பட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளும் எந்தப் பயன்பாடும் இல்லாமல் பாழாகிவிட்ட நிலையில், சில வீடுகளின் சுவர்களை இடித்து, செங்கற்கள் திருடப்பட்டுள்ளன.



புதர் மண்டி பரிதாப நிலையில் காணப்படும் இக்குடியிருப்புகள் தற்போது சமூக விரோத செயல்களுக்கு மட்டுமே பயன்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.



பயன்பாடு இல்லாமல், இடிந்து விழுந்து வீணாகி வரும் இந்த குடியிருப்புகளை அப்புறப்படுத்திவிட்டு, புதிய திட்டத்தை வீட்டு வசதி வாரியத்தினர் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும், நீண்ட காலமாக நீடிக்கும் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கேட்டு அரசுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...