கோவை கிணத்துக்கடவு அருகே கிராவல் மண் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

கோவை கிணத்துக்கடவு அருகே கோவிந்த நாயக்கனூரில் உரிய அனுமதிச்சீட்டு இல்லாமல் கிராவல் மண் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்த துணை வட்டாட்சியர்.



கோவை: கோவிந்த நாயக்கனூரில் கிராவல் மண் ஏற்றி வந்த லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள கோவிந்த நாயக்கனூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் புவியியல் மற்றும் சுங்கத்துறை துணை வட்டாட்சியர் பிரேமலதா இன்று காலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டார்.



அப்போது அந்த வழியாக கிராவல் மண் ஏற்றி வந்த லாரியை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டபோது, உரிய அனுமதிச்சீட்டு இல்லாமல் 2யூனிட் கிராவல் மண் ஏற்றி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த துணை வட்டாட்சியர் பிரேமலதா, கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...