கோவை ஆர்.எஸ் புரத்தில் தரமற்ற சாலைப்பணிகளால் வாகன ஓட்டிகள் அச்சம்!

கோவை ஆர்.எஸ் புரத்தில் பேட்ஜ் ஒர்க் பணிகள் தரமற்றதாக செய்ததால், ஜல்லிக்கற்கள் பெயர்ந்துள்ளன. அந்த சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.



கோவை: மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் சாலைப்பணிகளைத் தரமாக அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.



கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன. பழுது குறைவான சாலைகளில் பேட்ச் ஒர்க் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் ஆர்.எஸ் புரம் பகுதியிலிருந்து பூசாரிபாளையம் செல்லும் பகுதியில் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு பேட்ச் ஒர்க் பணிகள் கடந்த மூன்று நாட்களுக்கு முன் நடந்தது.



சாலையில் போடப்பட்ட ஜல்லி கற்கள் பெயர்ந்துள்ளதால், வாகன ஓட்டிகள் கீழே விழும் அபாயத்துடன் பயணித்து வருகின்றனர். இதனால் சாலைகளை தரமாக அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...