கோவை மாநகராட்சி கூட்டத்தில் குடும்பத்துடன் இளைஞர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

கோவை மாநகராட்சி கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது மாநகராட்சி அலுவலகத்திற்கு திடீரென டீசல் கேனுடன் வந்த இளைஞர், தனது மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.



கோவை: கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள விக்டோரியா ஹாலில் மாநகராட்சி கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.



அப்போது மதியம் சுமார் ஒரு மணியளவில் கூட்டம் நடைபெற்ற விக்டோரியா ஹால் முன்பு வந்த இளைஞர் ஒருவர் தனது கை குழந்தை மற்றும் மனைவியுடன் டீசல் கேனுடன் வந்து தீக்குளிக்க முயன்றார்.



இந்நிலையில் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பாதுகாப்புப் பணியிலிருந்த காவல்துறையினர், துரிதமாகச் செயல்பட்டு இளைஞரின் கையிலிருந்த கேனை பிடுங்கினர்.

அவரிடம் விசாரித்த போது, கோவை குனியம்புத்தூரை சேர்ந்த நவீன் என்றும், சுமார் 5 ஆண்டுகளாக மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்ததாகவும், தனக்குக் கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையைக் கொடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

மேலும் இதுதொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்ட போது சரிவரப் பதில் கூறவில்லை எனவும் அலட்சியமாக நடத்துவதாகவும், பணத்தைக் கொடுக்க முடியாது என மிரட்டுவதாகவும், துணை மேயர் உடன் உள்ள டேவிட் என்பவரும், உதவிப் பொறியாளர் ஒருவர் மீதும் கடுமையான குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

இதனிடையே தற்கொலைக்கு முயன்றவரை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். இளைஞர் தனது மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்றதால் மாநகராட்சி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இளைஞரின் குற்றச்சாட்டுத் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...