தாராபுரத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு - அமைச்சர் கயல்விழி பங்கேற்பு

தாராபுரத்தில் மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.



திருப்பூர்: மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றார்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம், மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் முன் வைக்கப்பட்ட காந்தியின் திருஉருவப்படத்துக்கு மாலை அணிவித்து ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி மரியாதை செலுத்தினார்.



அதன் பிறகு அமைச்சர் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் எடுத்துக் கொண்டனர்.

பின்னர், வட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள உள்ள அறைகள் மற்றும் ஒவ்வொரு அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை அமைச்சர் கயல்விழி ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது தாராபுரம் ஆர்.டி.ஓ குமரேசன், நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன், வட்டாட்சியர் ஜெகஜோதி மற்றும் அலுவலக பணியாளர் உடன் இருந்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...