தேங்காய் உரிக்கூலியை குறைத்து வழங்க தேங்காய் வியாபாரிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

கோவை பொள்ளாச்சியில் நடைபெற்ற தேங்காய் வியாபாரிகள் ஆலோசனை கூட்டத்தில் தேங்காய் விலை வீழ்ச்சி எதிரொலியாக உரிக்கூலியை குறைத்து வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.



கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற தென்னை விவசாயிகள், தேங்காய் வியாபாரிகள் ஆலோசனை கூட்டத்தில் தேங்காய் உரிக்கூலியை குறைத்து வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி அடுத்த கெடிமேடு பகுதியில் தென்னை விவசாயிகள் மற்றும் தேங்காய் வியாபாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி, உடுமலை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தேங்காய் விலையில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் தென்னை விவசாயிகள் மற்றும் தேங்காய் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

1) தேங்காய் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட போது உரிக்கூலியாக தேங்காய்க்கு 82 பைசா வழங்கப்பட்டது. தற்போது விலை வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளதால் 70 பைசாவாக குறைத்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தொழிலாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

2) மத்திய அரசு கொப்பரை தேங்காய்க்கு ஆதார விலையாக 150 ரூபாய் வழங்க வேண்டும்.

3) தேங்காய் எண்ணெய் தயாரிப்பு ஆலைகளை தமிழகத்தில் உருவாக்கி நியாய விலைக் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்

இவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...