நீலகிரியில் வீடு கட்ட அனுமதி சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய நகராட்சி வருவாய் உதவியாளர் உட்பட இருவர் கைது..!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் வீடு கட்ட அனுமதி சான்றிதழ் வழங்குவதற்கு லஞ்சம் வாங்கிய நகராட்சி வருவாய் உதவியாளர் உள்பட இருவரை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்துள்ளனர்.



நீலகிரி: கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் வருவாய் உதவியாளராக பணியாற்றி வருபவர் ஸ்ரீஜித். அங்கு அலுவலக உதவியாளராக பணியாற்றி வருபவர் ரமேஷ்.

இந்நிலையில், இவர்களிடம் தொரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஒருவர் கிராமப்புற குடிசை மாற்று வீடு கட்டுவதற்காக கதவு எண் பெற விண்ணப்பித்துள்ளார். ஆனால், கதவு எண் வழங்காமல் தாமதித்து வந்ததுடன், அதற்காக 11,000 ரூபாய் லஞ்சமாக தர வேண்டுமென ஸ்ரீஜித் கேட்டதாக கூறப்படுகிறது.



இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர், நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரசாயனம் கலந்த 11,000 ரூபாயை கொடுத்து ஸ்ரீஜித்தின் உதவியாளர் ரமேஷிடம் கொடுக்க வைத்துள்ளனர்.



இந்நிலையில், ரமேஷ் பணத்தை வாங்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதனையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை உதகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...