கோவை டூ சென்னைக்கு தொடர் சைக்கிள் பயணம் - கோவை கல்லூரி மாணவர் ஜீவா சாதனை!

கோவையில் இருந்து சென்னைக்கு நிற்காமல் சைக்கிளில் பயணித்து சாதனை படைத்த கோவையை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர் ஜீவாவுக்கு கலாம் வேர்ல்டு ரெக்கார்டு அமைப்பினர் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு.



கோவை: கோவையில் இருந்து சென்னைக்கு இடைநில்லாமல் சைக்கிளில் பயணித்து சாதனை படைத்த கல்லூரி மாணவர் ஜீவாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கோவையை சேர்ந்த ஜீவா என்ற இளைஞர், தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். சிறுவயதில் இருந்தே சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் காட்டி வந்த ஜீவாவுக்கு அதிக தூரம் சைக்கிளில் பயணிப்பது பொழுதுபோக்காக இருந்து வருகிறது.



இந்த நிலையில் ஜீவா கோவை முதல் சென்னை வரை இடைநில்லாமல் சைக்கிளில் பயணித்துள்ளார். கடந்த 27 ஆம் தேதி சரவணம்பட்டியில் காலை 4 மணிக்கு சைக்கிளில் புறப்பட்ட ஜீவா அடுத்த நாள் காலை 9:30 மணிக்கு சென்னை மெரினா கடற்கரை வரை சென்றுள்ளார்.



சிக்னல்களில் காவல் துறை உதவியுடன் கடந்து சென்ற கல்லூரி மாணவர் ஜீவா இடைநில்லாமல் 520 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் பயணித்துள்ளார்.

இதை அங்கிகரித்த கலாம் வேர்ல்டு ரெக்கார்டு அமைப்பினர், "நான் ஸ்டாப் சைக்கிளிங் ஆன் சிங்கிள் ஸ்பீடு ரைடர் எம் டி பி" சாதனையாளராக அங்கிகரித்து சான்றிதழ் வழங்கி மாணவர் ஜீவாவை கௌரவித்துள்ளனர்.

சைக்கிளிங்கை பொழுதுபோக்காக ஆரம்பித்த கல்லூரி மாணவர் ஜீவா வருங்காலங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சைக்கிளிங் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...