உடுமலை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் குறுகிய கால திறன் பயிற்சி

ஏழை மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில், குறுகிய கால திறன் பயிற்சி பெற விரும்புவோர், திருப்பூர் மாவட்டம் உடுமலை எலையமுத்துார் சாலை, அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.


திருப்பூர்: உடுமலை அரசு தொழிற்பயிற்சி மையத்தில், குறுகிய கால திறன் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழை மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில், தமிழக அரசு திறன் மேம்பாட்டுப் பயிற்சியை அளித்து வருகிறது.



அதன் அடிப்படையில் உடுமலை அரசு தொழிற்பயிற்சி நிலையம், தமிழக அரசின் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் குறுகிய கால திறன் பயிற்சி அளிக்கும் மையமாகப் படச் செயல் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், எலக்ட்ரீசியன் டொமஸ் சொல்யூசன்ஸ், தொழிற்பிரிவு, 100 நாட்கள், 400 மணி நேரம் குறுகிய கால பயிற்சி வகுப்புகள் துவங்க உள்ளன.

இதில் சேர, 8, 10ஆம் வகுப்பு அல்லது ஒரு ஆண்டு முன் அனுபவம் உள்ளவர்கள், தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்கள், 18 முதல் 45 வயது வரை உள்ள, ஆண், பெண் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம்.

இலவச பயிற்சி முடிவில் அரசு சான்றிதழுடன், முன்னணி நிறுவனங்களில் நல்ல ஊதியத்துடன், உடனடி வேலை வாய்ப்பு பெற்றுத்தரப்படும். பயிற்சியில் சேருபவர்களுக்கு, நாள் ஒன்றுக்கு, 100 ரூபாய் போக்குவரத்து படி வழங்கப்படும்.

பயிற்சி பெற விரும்புவோர், உடுமலை எலையமுத்துார் சாலை, அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம், என அரசு ஐ.டி.ஐ., முதல்வர் ராஜேஸ்வரி விடுத்து உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...