பல்லடம் கேத்தனூரில் மாரியம்மன், காசி விஸ்வநாதர் கோயில்கள் குடமுழுக்கு விழா - பக்தர்கள் தரிசனம்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கேத்தனூரில் மாரியம்மன், விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் திருக்கோயில்களின் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கேத்தனூரில் வரம்தரும் மாரியம்மன், விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் திருக்கோயில்கள் அமைந்துள்ளன. இரண்டு திருக்கோவில்களும் 36 வருடங்களுக்கு பிறகு புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.



கடந்த 30 ஆம் தேதி விநாயகர் வழிபாடு, நவகிரக ஹோமத்தோடு விழா தொடங்கி, யாகங்கள் நடத்தப்பட்டு, கலசாபிஷேகம், விநாயகர் பூஜை மற்றும் நேற்று திருமுறை பாராயணம், பூதசுத்தி புண்யாகம், யாகபூஜை, தீபாராதனை உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தன.



இன்று காலை வரம்தரும் மாரியம்மன், விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதரின் மூலவர் சிலைகளுக்கும் கோவிலின் கோபுர கலசத்திற்கும் சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேக விழாவினை நடத்தி வைத்தனர்.



விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டது. குடமுழுக்கு விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும், அடுத்த 48 நாட்களுக்கு வரம்தரும் மாரியம்மன், விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதருக்கு மண்டல பூஜை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...