பொள்ளாச்சி பாலாற்றங்கரை ஆஞ்சநேய கோவில் கும்பாபிஷேக விழா - பக்தர்கள் தரிசனம்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நகராட்சிக் கூட்டம் நகரமன்றத் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் மற்றும் நகராட்சி ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 47 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் உள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூரிலிருந்து அதிகளவில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இக்கோவிலின் சிறப்பு அம்சமாக ஆஞ்சநேயர் ஒரே கருவறையில் மூலவர் சமதள பரப்பில் இருப்பதும் நின்ற கோலத்தில் மூர்த்தியாக இருப்பதும் தமிழகத்தில் இங்கு மட்டும்தான் இருப்பது என்பது சிறப்பு அம்சமாக சொல்லப்படுகிறது.

இந்த கோவில் கும்பாபிஷேகம் 13 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மங்கல இசையுடன் நான்காம் கால யாக பூஜையை தொடர்ந்து நடைபெற்றது.



இதில், கும்பம் எழுந்தருளி திருக்கோவிலில் பவனி வந்து பின்னர் ராஜகோபுரம் ஆஞ்சநேயர் மூலவர் கோபுரம் ராமர் பாத கோபுரம், மற்றும் விநாயகர் கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.



இந்த கும்பாபிஷேக விழாவில் ஆனைமலை பொள்ளாச்சி கோவை, உடுமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...