திருப்பூர் ஓடக்காடு பகுதியில் அதிகாலையில் பைக் திருட்டு - வீடியோ வைரல்

திருப்பூர் ஓடக்காடு பகுதியில் அதிகாலையில் வாலிபர்கள் பைக் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள், சமூகவலைதளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



திருப்பூர்: திருப்பூரில் வாலிபர்கள் பைக் திருடிச் செல்லும் காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.

திருப்பூர் ஓடக்காடு, காலேஜ் ரோடு 7ஆவது குறுக்கு வீதியைச் சேர்ந்த வெங்கட் என்பவர் தனது பைக்கினை வீட்டு முன் நிறுத்தி விட்டு இரவு தூங்க சென்றுள்ளார். à®ªà®¿à®©à¯à®©à®°à¯ காலையில் எழுந்து பார்த்த போது பைக் மாயமாகி இருந்தது.



இதையடுத்து பக்கத்து வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, அதிகாலை 3 மணியளவில் இரண்டு வாலிபர்கள் சாவகாசமாக வெங்கட்டின் பைக்கினையும், பக்கத்து வீட்டினை சேர்ந்த இன்னொருவரின் பைக்கையும், சைடு லாக்கினை உடைத்து எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

பைக் திருட வந்த இருவரும் சொந்த வாகனத்தை எடுத்துச் செல்வது போல ஆளுக்கொரு வாகனத்தை எடுத்துச் செல்கின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் வடக்குப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஒரே இடத்தில் இரண்டு பைக்குக்களை திருடிச்செல்லும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாநகரில் தொடர்ச்சியாக இருசக்கர வாகனங்களைத் திருடிச்செல்லும் சம்பவங்களும், அந்த வாகனங்கள் மூலம் வழிப்பறி, திருட்டு மற்றும் கஞ்சா விற்பனை போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும், இதனால் அப்பாவி வாகன உரிமையாளர்கள் பெரும் சிக்கலுக்கும், அலைச்சலுக்கும் ஆளாவதாகவும் தெரிவிக்கிறார்கள்.

திருப்பூர் போலீசார் முழுமையாகக் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருசக்கர வாகன திருட்டுகளைத் தடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...