தாராபுரம் அருகே பைக்கில் இருந்து தடுமாறி விழுந்ததில் பெண் பலி

புதுக்கோட்டையிலிருந்து குண்டடம் செல்ல பைக்கில் குடும்பத்துடன் வந்த உணவக உரிமையாளர் மனைவி விபத்தில் சிக்கி உயிரிழப்பு.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பைக்கில் சென்ற போது வேகத்தடையில் ஏறி இறங்கிய போது தடுமாறி கீழே விழுந்த பெண் உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒய்யான் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன்-திவ்யா தம்பதி. இவரது மகன் சிவபாலன்(8), மகள் சிவன்யஸ்ரீ(6), ஆகியோருடன் குண்டடம் அடுத்த மேட்டுக் கடையைப் பகுதியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் விஸ்வநாதன் அப்பகுதியில் சாலையோர தள்ளுவண்டி உணவகம் கடை நடத்தி வருகிறார். இவர் பொங்கலுக்காக குடும்பத்துடன் பைக்கில் புதுக்கோட்டைக்கு சென்று விட்டு குண்டடம் செல்ல குடும்பத்துடன் தாராபுரம் வழியாகச் சென்று கொண்டிருந்தார்.

வரப்பாளையம் அருகே சாலையில் உள்ள வேகத்தடையில் பைக் ஏறி இறங்கியதால் பின்னால் அமர்ந்திருந்த மனைவி திவ்யா கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்குப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே திவ்யா இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...