வால்பாறை சுப்ரமணியசாமி கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கிய தைப்பூச திருவிழா

வால்பாறையில் உள்ள சுப்ரமணிய சாமி கோவிலில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியுள்ள நிலையில், முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வரும் பிப்.4ஆம் தேதி நடைபெற உள்ளது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுப்பிரமணிய சாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி உள்ளது.

வால்பாறையில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலில் 18 ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழா இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண நிகழ்வு வரும் பிப்ரவரி 4ஆம் தேதி மாலை 6 மணி நடைபெற உள்ளது.

இதனை தொடர்ந்து 5ஆம் தேதி காலை 9 மணிக்கு வால்பாறை ஓம் சக்தி வழிபாடு, மன்ற குழுவினர் சார்பில் பால்குட தீர்த்தம் கொண்டு வரப்பட்டு காலை 10:00 மணிக்கு அபிஷேக பூஜைகள் நடைபெற உள்ளன.

இதையடுத்து நல்லகாத்து எஸ்டேட் பாலத்தில் இருந்து முருக பக்தர்கள் அழகு பறவை காவடி எடுத்து நகரின் முக்கிய வீதி வழியாக கோவிலுக்கு சென்று 11 மணிக்கு அன்னதானம் வழங்கும் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் மாலை 5 மணிக்கு அலங்காரத்துடன் வள்ளி, தெய்வானை தேவியுடன் முருகன் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.



இந்நிலையில், தைப்பூச விழா இன்று கொடி ஏற்றத்துடன் துவங்கி உள்ள நிலையில், திருக்கல்யாண நிகழ்வுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் விரைவாக செய்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...