கோவையில் வீட்டின் முன்பு நிறுத்திய இருசக்கர வாகனம் மாயம் - போலீசார் விசாரணை

துடியலூர் அடுத்த வடமதுரை பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்திருந்த இருசக்கர வாகனம் மாயமான புகாரின் அடிப்படையில் துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் துடியலூர் அடுத்த வடமதுரை வி.எஸ்.கே நகர் பகுதியில் வசித்து வருபவர் பெரியசாமி. இவர் நேற்று முன்தினம் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த டியோ இருசக்கர வாகனம் காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதையடுத்து பெரியசாமி துடியலூர் காவல் நிலையத்தில் தனது டியோ இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டதாக புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த துடியலூர் போலீசார் காணாமல் போன இருசக்கர வாகனத்தை தேடி வருகின்றனர்.

வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மாயமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...