தாராபுரத்தில் டெம்போ டிராவலர் மீது பள்ளி வாகனம் மோதி விபத்து - பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தனியார் பள்ளி வாகனம், டெம்போ டிராவலர் மீது மோதி விபத்துக்குள்ளானதால் பரபரப்பு. பள்ளி வாகன ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்துக்காரணம் என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அலங்கியம் சாலையில் பள்ளி மாணவ மாணவிகளை ஏற்றிச் சென்ற தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் வாகனம் இண்டிகேட்டர் போடாமல் திடீரென சாலை ஓரத்தில் வாகனத்தை நிறுத்தியது. இதனால், அந்த வழியாக வந்து கொண்டிருந்த தனியார் டெம்போ ட்ராவலர் மீது மோதி விபத்துக்குள்ளானது.



இதில், தனியார் ட்ராவலர் வாகனத்தின் கண்ணாடி உடைந்து சேதமானது. இரு ஓட்டுனர்கள் இடையே சாலையின் நடுவே வாக்குவாதம் ஏற்பட்டதால், அப்பகுதியில் பொதுமக்கள் கூடினர். இரண்டு வாகனங்களும் நடுரோட்டில் நின்றதால் கரூரிலிருந்து பேருந்து நிலையம் செல்லவிருந்த அரசு பேருந்து மற்றும் இருசக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல வழி இல்லாமல் நடுரோட்டில் வாகனத்தை நிறுத்தினர்.



இதனால், சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வாகன ஓட்டுநரின் கவனக்குறைவே இந்த விபத்துக்கு காரணம் என அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டினர். காலை நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்தால் தாராபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...