உடுமலையில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு - உருவச்சிலைக்கு திமுகவினர் மரியாதை!

முன்னாள் முதல்வர் அண்ணா நினைவு நாளை ஒட்டி திருப்பூர் மாவட்டம் உடுமலையில் திமுக சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


திருப்பூர்: தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 54வது நினைவு தினம் மாநிலம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.

அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அறிஞர் அண்ணாவின் முழுஉருவச் சிலைக்கு, அவரது நினைவினைப் போற்றும் வகையில் உடுமலை நகர திமுக செயலாளர் வேலுச்சாமி தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினர் குமார், நகர மன்ற துணை தலைவர் கலைராஜன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயகுமார், மற்றும் மாவட்ட கழக ,நகர கழக, கிளை நிர்வாகிகள், சார்பு அமைப்பு அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...