உடுமலையில் கத்தரிக்காய் சாகுபடியில் நோய் தாக்குதல் - இழப்பீடு கோரும் விவசாயிகள்!

திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் கத்தரிக்காயில் அதிகரித்துவரும் நோய்த்தாக்குதலால் விவசாயிகள் கவலை. அரசு உரிய இழப்பீடு வழங்கும்படி கோரிக்கை.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்று வட்டார பகுதிகளான உரல்பட்டி ,பாப்பான்குளம் குடிமங்கலம் உட்பட பல்வேறு கிராமங்களில் கிணற்றுப் பாசனத்தில் பரவலாக கத்தரி சாகுபடி செய்யப்படுகிறது.

நாட்டு ரக கத்தரி சாகுபடி பரப்பு குறைந்து, பெரும்பாலும் வீரிய ரக விதைகளே அண்மைக்காலமாக பயன்படுத்தப்படுகிறது. சிலர், நாற்றுப்பண்ணைகளிலிருந்து நாற்றுகள் வாங்கி, நடவு செய்யும் முறையை பின்பற்றுகின்றனர். இங்கு உற்பத்தியாகும் கத்தரிக்காயானது பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா மறையூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.



நுண்ணீர் மற்றும் சொட்டு நீர்ப்பாசனம் அமைத்துள்ளதால், ஆண்டு முழுவதும் இவ்வகை சாகுபடியில் உடுமலை பகுதி விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த சீசனில் அதிக பனிப்பொழிவு காரணமாக கத்தரி செடிகளில் நோய்த்தாக்குதல் அதிகரித்துள்ளது.



குறிப்பாக, கத்தரிக்காயில் அழுகல் நோய் மற்றும் துளைகள் விழுவது அதிகரித்துள்ளது. எனவே, சந்தைகளில் விற்பனை செய்ய முடியாமல் காய்களை குப்பைகளில் வீசும்நிலை ஏற்பட்டுள்ளது.

வேளாண்துறையினரின் பரிந்துரைப்படி, மருந்து தெளித்தும் நோய்த் தாக்குதலை கட்டுப்படுத்த முடியவில்லை. சாகுபடியில் நஷ்டம் ஏற்படும் சூழல் உள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.



உற்பத்தி பாதித்து, சந்தைக்கு வரத்து குறைந்தால், விலை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. தற்சமயம் உடுமலை சந்தைகளில் கத்திரிக்காய் கிலோ 18 ரூபாய்க்கு விற்பனை ஆகிவருகிறது.

ஒரு ஏக்கருக்கு சுமார் 30,000 வரை செலவு செய்திருக்கும் நிலையில் கத்தரிக்காயில் நோய் தாக்குதலால் மகசூல் குறைய வாய்ப்புள்ளதாக வேதனை தெரிவித்துள்ள விவசாயிகள், சம்பந்தப்பட்ட வேளாண்துறையினர் களஆய்வு மேற்கொண்டு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...