திருப்பூர் மாநகராட்சியின் புதிய ஆணையராக பவன் குமார் ஜி.கிரியப்பனவர் பதவியேற்பு

திருப்பூர் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்ட பவன் குமார் ஜி.கிரியப்பனவர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று பொறுப்பேற்று கொண்ட நிலையில் அவருக்கு மேயர் தினேஷ்குமார் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியின் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள பவன் குமார் ஜி.கிரியப்பனவர், மாநகராட்சி அலுவலகத்தில் இன்று பொறுப்பேற்று கொண்டார்.

தமிழகம் முழுவதும், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில், திருப்பூர் மாநகராட்சி ஆணையராக இருந்த கிராந்தி குமார், கோவை ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், அவருக்கு பதிலாக, கடலூர் மாவட்ட திட்ட இயக்குனராக இருந்த பவன் குமார் ஜி.கிரியப்பனவர் திருப்பூர் மாநகராட்சியின் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டார்.



இந்த நிலையில் திருப்பூர் மாநகராட்சியின் புதிய ஆணையராக பவன் குமார் ஜி.கிரியப்பனவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.



அவருக்கு மாநகராட்சி மேயர் தினேஷ் குமார் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

திருப்பூர் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்ட பவன் குமார் ஜி.கிரியப்பனவர் ஏற்கனவே, தாராபுரம் துணை ஆட்சியராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...